Wednesday, June 29, 2016

சீஸ் டோஸ்ட் எப்படிச் செய்வது?





என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் 6
புதினா ஒரு கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
தனி மிளகாய்த் தூள் அரை டேபிள் ஸ்பூன்
புளி சுண்டைக்காய் அளவு
வெல்லம் நெல்லிக்காய் அளவு
துருவிய சீஸ் அரை கப்
நெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், புளி, வெல்லம் இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிரெட் துண்டின் மீது இந்த விழுதைத் தடவி அதன் மேல் இன்னொரு பிரெட்டை வையுங்கள். அதன் மேல் துருவிய சீஸ் வைத்து, பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்யுங்கள். காலை உணவாகவோ மாலை நேரத் தேநீருடனோ சாப்பிடலாம்.

நன்றி : மேகலா

No comments:

Post a Comment