Sunday, September 30, 2012

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்



பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்

கேரட்டை சாப்பிடும் முறை



கேரட்டை சாப்பிடும் முறை...

கேரட்டை சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வார்கள். சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகும். அதனால் சமைக்கால் சாப்பிட வேண்டும் என்பது அவர்கள் வாதம். சமைக்கால் அப்படியே சாப்பிடுவதும் நல்லதுதான் என்றும் சிலர் சொல்வது உண்டு. பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டும் நமது உடல் வைட்டமின் ஏ வாக மாற்
றும். ஆனால், சமைத்து சாப்பிடும் போது இது 50 சதவீதமாக அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்காக அதிக நேரம் அடுப்பில் வைத்திக்க வேண்டாம்.

எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலைச் சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிட வேண்டும். இந்த பகுதிகளில் தான் கேரட் செடி நன்றாக வளர வேண்டும் என்று தெளிக்கப்படுகிற பூச்சி மருந்து, உரம் அதிகமாக தேங்கி நிற்குமாம். கேரட்டை பச்சையாக சாப்பிடாமல், கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் வைத்து பின்னர் சாப்பிடலாம். இதனால், மண்ணில் இருந்து எடுக்கும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படும்.

Thursday, September 27, 2012

கை, கால் மூட்டு வலி குறைய




லண்டன்: "கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப
்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, "ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.

நன்றி: Rks Thevan
 — with Mahes WaranMonica 

மூலிகை மருந்துகள்



மூலிகை மருந்துகள் :-

உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.

ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத
்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.

ஆகவே அத்தகைய ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.

நன்றி : ஜெ.ரா.ஜெயகணேஷ் (J.R.JeyaGanesh )

செல்போன் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழி

                                      

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது 
எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்
கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

Tuesday, September 18, 2012

கிவி பழம்...!





சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் தரும் கிவி பழம்...!

பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள்.தமிழில் இதன் பெயர் பசலிப்பழம். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற
 பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.

கிவியின் நன்மைகள்:

சிட்ரஸ் ரக பழமான கிவி பழத்தில் வைட்டமின் ஏ,சி, ஈஅதிகமாக உள்ளது. தோல், இதய, புற்று நோய் போன்ற பலவற்றிலிருந்து விட்டமைன் ’சி’ நம்மை பாதுகாக்கிறது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும்

நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.

டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும்.

கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

கிவி பழத்தை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?

கிவி பழத்தின் மேல் பகுதி தடிமனாகவும், உட்பகுதியில் சுவையான பழமும் இருக்கும். இதன் மேல் பகுதியை அழுத்தினால் சற்று உள்ளே செல்ல வேண்டும், அதுவே சாப்பிடுவதற்கு ஏற்ற பழம். மேலும் இதில் பெரிய பழம் நன்றாக இருக்கும், சிறிய பழம் சுவை குறைவாக இருக்கும் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால், பெரிய பழத்தை விட சிறிய பழமே சுவையாக இருக்கும்.
 

Sunday, September 16, 2012

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்




நன்றி:   தமிழ் -கருத்துக்களம்-


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன். இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன். இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன். தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்க
ளை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன்.

நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன். ஆனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும். நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?! தேடல் தொடரும்..!!!

குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது !
 

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பள்ளி "அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்"




அணுவுலை வந்தாதான் மின்சாரம் வரும்னு நம்புற அறிவாளிகளே , திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில்"அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது.தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப்பள்ளிக்கே உண்டு.தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல்,தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கிலவழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற பெருமையும் உண்டு.கிராமப்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும் இங்கு,ஒவ்வொரு மாணவருக்கும் 1 லட்சம் ரூபாய் வங்கியில் இன்சுரன்ஸ் செய்துள்ளது இப்பள்ளி நிர்வாகம்.மற்ற நாடுகளை விட நம் நாட்டில் சூரிய ஆற்றல் அதிகமாகவே கிடைக்கிறது.

மாரடைப்பை தவிர்க்




மாரடைப்பை தவிர்க்க .. 



தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்

கீரை





கீரைகளின் பயன்கள் !!!!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும். 

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்

சுரைக்காய்


                                                            


சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:--

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

sensory touches at the bottom of our foot




The Organs of your body have their sensory touches at the bottom of your foot, if you massage these points you will find relief from aches and pains as you can see the heart is on the left foot.

Typically they are shown as points and arrows to show which organ it connects to.
It is indeed correct since the nerves connected to these organs terminate here.
This is covered in great details in Acupre
ssure studies or textbooks.

Every time you walk BAREFOOT you are pressing these pressure points and thus keeping these organs activated at all times.

Thursday, September 13, 2012

பாட்டிவைத்தியம்






எளிய பாட்டிவைத்தியம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

*

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

*

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

*

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

*

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

*

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

*

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

*

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

*

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

*

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

*

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

*

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

*

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

*

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

*

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

*

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

*

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

*

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

*

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

*

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

*

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

*

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

*

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

*

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

*

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

*

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

*

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

*

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

*

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

*

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

*

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

*

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

***

Monday, September 10, 2012

கற்றாழை - Aloe vera










கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வள
ரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும். 

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். 

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. 

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.