Saturday, July 27, 2013

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?




பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது. கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன.

இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது. சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும்.

அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண உடல் நிலையில் உள்ளவர்களுக்கு ஓ.கே. அதுவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருப்பதன் விளைவாக, அதிகப்படியான ஆற்றலானது ரத்தத்தில் சேகரிக்கப்படும். அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு பச்சரிசி வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

யாருக்கெல்லாம் அரிசி கூடாது?

நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள், பருமன் உள்ளவர்கள், முட்டி வலி உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள்... இவர்கள் அரிசி உணவைக் குறைத்து உண்ணலாம் அல்லது செரிமானத்துக்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற சாமை அரிசி, தினை அரிசி போன்ற வகையறாக்களை சாப்பிடலாம்....

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்...!






சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும். அதற்கான அரசாணை நகல் இது.சாதி மதகுறிப்பிட விரும்பாதவர்கள் இதை நகல் எடுத்து ப் படிவத்துடன் கொடுக்கலாம்.



Friday, July 26, 2013

சாக்கடல் (Dead Sea)




இஸ்ரேல் - ஜோர்டான் எல்லையில் மத்தியதரைக் கடலோடு சேர்ந்திருக்கும் ஒரு உப்பு நீர் ஏரிதான் சாக்கடல் (ஈஉஅஈ நஉஅ). உண்மையில் இதற்கு சாக்கடல் என்ற பெயர் பொருந்தாது. முதலாவதாக இந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல இது ஒரு கடல் அல்ல.
இது ஒரு பெரிய ஏரிதான். உலகத்திலேயே மிகவும் அடர்த்தி மிகுந்த உப்பு நீர் உள்ள ஏரி இது. சாதாரண கடல் நீரைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமான உப்பும் மற்ற உப்புப் பொருட்களும் சாக்கடல் நீரில் கலந்திருக்கின்றன. உப்பு மற்றும் மற்ற உப்புப் பொருட்களின் அதிகமான அடர்த்தியின் காரணத்தால் மீன்களோ மற்ற சாதாரண  நீர் வாழ்  உயிரினங்களோ இங்கே வாழ முடியாது.
இந்தக் காரணத்தால்தான் இதை சாக்கடல் என்று அழைக்கிறார்கள். ஆயினும் இங்கும் இந்தப் பெயர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.
ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,        ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன.
சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் ஆகியவை பெரிய அளவில் அடங்கியிருக்கின்றன.
நிறைய ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்
சாலைகள்      இவற்றைப்பயன்படுத்திவருகின்றன. சாக்கடலில் தண்ணீர் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதில் மனிதர்கள் மூழ்குவது சிரமம். மனிதர்கள் அதில் மிதக்கலாம். சாக்கடலில் படுத்தபடி பத்திரிகை படிக்கின்ற வெளிநாட்டுப் பயணிகளின் படங்கள் பிரபலமானவை.

Thanks: dinamani

Monday, July 22, 2013

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!




சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.

உதாரணமாக, ஏ என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை (முதல் காலாண்டு) என்று அர்த்தம். பி என குறிக்கப்பட்டு இருந்தால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் குறிக்கும். சிலிண்டரில் பி13 என குறிக்கபட்டு இருந்தால் ஜூன் மாதம் 2013 வரை பயன்படுத்தலாம் என்பதாகும்.

அடுத்ததாக, ரெகுலேட்டர் பொருத்தும் 0 வடிவ ரப்பரை சரிபார்க்க வேண்டும். ரப்பரில் சேதாரம் உள்ளதா? புதியதாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். இதில் கோளாறு இருந்தால், காஸ் லீக் ஆகும். அதனால், புது சிலிண்டர் வந்தவுடன் அதை சப்ளை செய்பவரிடமே கூறி ரெகுலேட்டர் பொருத்தி சோதித்து பார்த்து வாங்குவது நல்லது. காஸ் கசிவு இருந்தால், சப்ளை செய்பவரே ரப்பரை மாற்றி கொடுத்து விடுவார். சிலிண்டர் டியூபையும் அடிக்க பரிசோதிக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் ஒரே டியூபை பயன்படுத்தாதீர். புதுசு மாத்திடுங்க.சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.

உதாரணமாக, ஏ என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை (முதல் காலாண்டு) என்று அர்த்தம். பி என குறிக்கப்பட்டு இருந்தால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் குறிக்கும். சிலிண்டரில் பி13 என குறிக்கபட்டு இருந்தால் ஜூன் மாதம் 2013 வரை பயன்படுத்தலாம் என்பதாகும்.

அடுத்ததாக, ரெகுலேட்டர் பொருத்தும் 0 வடிவ ரப்பரை சரிபார்க்க வேண்டும். ரப்பரில் சேதாரம் உள்ளதா? புதியதாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். இதில் கோளாறு இருந்தால், காஸ் லீக் ஆகும். அதனால், புது சிலிண்டர் வந்தவுடன் அதை சப்ளை செய்பவரிடமே கூறி ரெகுலேட்டர் பொருத்தி சோதித்து பார்த்து வாங்குவது நல்லது. காஸ் கசிவு இருந்தால், சப்ளை செய்பவரே ரப்பரை மாற்றி கொடுத்து விடுவார். சிலிண்டர் டியூபையும் அடிக்க பரிசோதிக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் ஒரே டியூபை பயன்படுத்தாதீர். புதுசு மாத்திடுங்க.

கறிவேப்பிலை சாப்பிடுங்க….!





"என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.


தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

நிலக்கடலை…!




நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால்அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறானதகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science

Monday, July 15, 2013

எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?



வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா.

Thanks : via Niroshini Naren
மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

பெண்,ஆண் -ஏழு பருவங்கள்



பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்



ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

Sunday, July 14, 2013

வாஸ்து





உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. 

அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. 

அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது.

ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும்.

மேலும் வாஸ்து மற்றும் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாக அமையும்.

அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்...

1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள்.

வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும்.

ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் இந்த திசை தான் தீயசக்திகளின் நுழைவாயில்.

அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி.

அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி.

அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.

மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது.

அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும்.

அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும்.

முக்கியமாக தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
 மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது.

முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள்.

இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது.

இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது.

அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது.

அது நம் பண விரயத்துக்கு தடை போதும்

12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

....

14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

Friday, July 12, 2013

கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்





பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும். 

வளையபட்டி "தவில்"கலைஞர் திரு.A.R.சுப்ரமணியம்...!





புதுக்கோட்டையின் பெருமைகளில் இதுவும் ஒன்று...

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு ஊர் வளையபட்டி.

வளையபட்டி என்றாலே நம் நினைவிற்கு வருவது "தவில்" தான். காரணம் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த "வளையபட்டி தவிலே தவிலே" என்ற பாடல்.
அனால் இப்பெயர் உருவானதற்கு உண்மையான காரணம் இதோ:

வளையபட்டியில் பிறந்தவர் திரு.A.R.சுப்ரமணியம். ஒரு முன்னணி தவில் கலைஞர் (தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவி).

இவர் ஆரம்பத்தில் அவரது தந்தை ஆறுமுகதிடமிருந்து நாதஸ்வரம் பயின்றார். ஆனால் தவிலால் ஈர்க்கப்பட்டு மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடமிருந்து தவில் கலையை கற்றார்.

ஜீன்ஸ் படத்தில் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் பின்னணி தவில் இசை இவருடையது தான்.

இதுபோல் பல பாடல்களுக்கு இவர் தவில் வாசித்துள்ளார். எனவே இவர் "மியூசிக் மேஸ்ட்ரோ" என்றும் அழைக்கபடுகிறார். வளையபட்டியில் இருந்து வந்த தவில் கலைஞர் இவர் என்பதால் அப்பெயர் பிரபலமாகியது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று இவருக்கு மிகவும் பெருமதிப்பிற்குரிய விருதான "சங்கீத கலாநிதி" விருது வழங்கப்பட்டது.

"சங்கீத கலாநிதி" விருது வாங்கிய முதல் தவில் கலைஞர் வளையபட்டி திரு.A.R.சுப்ரமணியம் என்பது நமது புதுக்கோட்டைக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை !

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர்..!



மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர்..!

v.a.siva iyyadurai
வி.ஏ. சிவ அய்யாதுரை
புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்துகொண்டே வந்தது.
கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே இல்லை.. 
கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும் அதனுடைய வளர்ச்சி வேகம் இருமடங்காகியது என்றால் அது மிகையாகாது. அதுவும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டது.

அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று. இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன. 

தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.
v.a. ayyadurai
இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுப்பிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்பணித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா? 

ஆம் நண்பர்களே..! மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே!  அப்போது அவருக்கு வயது வெறும் 14 தான்.

V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர். 

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தபோது இவருக்கு பதினான்கு வயது மட்டுமே.. ஆச்சர்யமாக இருக்கிறதா? மிகவும் இளவயதிலேயே இச்சாதனையை இவர் நிகழ்த்தியிருக்கிறார். 
v.a. iyaadurai
பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை. 

மாணவப்பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை  ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும் அறிவித்திருக்கிறார். 

இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான சிவா அய்யாதுரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட. 

அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்து சிறப்பித்து பாராட்டியிருக்கிறது.

 இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும், திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என நினைக்கிறேன். 

 இன்று அனைவராலும் பயன்படுத்துக்கூடிய, மிகச்சிறந்த என்று அழியாத ஒரு கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி, உலக மக்களுக்கு வழங்கிய திரு. சிவா அய்யாத்துரை அவர்களை  வாழ்த்தி மகிழ்வோம்.. 

Thanks: தங்கம்பழனி