Friday, July 12, 2013

வளையபட்டி "தவில்"கலைஞர் திரு.A.R.சுப்ரமணியம்...!





புதுக்கோட்டையின் பெருமைகளில் இதுவும் ஒன்று...

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு ஊர் வளையபட்டி.

வளையபட்டி என்றாலே நம் நினைவிற்கு வருவது "தவில்" தான். காரணம் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த "வளையபட்டி தவிலே தவிலே" என்ற பாடல்.
அனால் இப்பெயர் உருவானதற்கு உண்மையான காரணம் இதோ:

வளையபட்டியில் பிறந்தவர் திரு.A.R.சுப்ரமணியம். ஒரு முன்னணி தவில் கலைஞர் (தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவி).

இவர் ஆரம்பத்தில் அவரது தந்தை ஆறுமுகதிடமிருந்து நாதஸ்வரம் பயின்றார். ஆனால் தவிலால் ஈர்க்கப்பட்டு மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடமிருந்து தவில் கலையை கற்றார்.

ஜீன்ஸ் படத்தில் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் பின்னணி தவில் இசை இவருடையது தான்.

இதுபோல் பல பாடல்களுக்கு இவர் தவில் வாசித்துள்ளார். எனவே இவர் "மியூசிக் மேஸ்ட்ரோ" என்றும் அழைக்கபடுகிறார். வளையபட்டியில் இருந்து வந்த தவில் கலைஞர் இவர் என்பதால் அப்பெயர் பிரபலமாகியது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று இவருக்கு மிகவும் பெருமதிப்பிற்குரிய விருதான "சங்கீத கலாநிதி" விருது வழங்கப்பட்டது.

"சங்கீத கலாநிதி" விருது வாங்கிய முதல் தவில் கலைஞர் வளையபட்டி திரு.A.R.சுப்ரமணியம் என்பது நமது புதுக்கோட்டைக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை !

No comments:

Post a Comment