Friday, July 26, 2013

சாக்கடல் (Dead Sea)




இஸ்ரேல் - ஜோர்டான் எல்லையில் மத்தியதரைக் கடலோடு சேர்ந்திருக்கும் ஒரு உப்பு நீர் ஏரிதான் சாக்கடல் (ஈஉஅஈ நஉஅ). உண்மையில் இதற்கு சாக்கடல் என்ற பெயர் பொருந்தாது. முதலாவதாக இந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல இது ஒரு கடல் அல்ல.
இது ஒரு பெரிய ஏரிதான். உலகத்திலேயே மிகவும் அடர்த்தி மிகுந்த உப்பு நீர் உள்ள ஏரி இது. சாதாரண கடல் நீரைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமான உப்பும் மற்ற உப்புப் பொருட்களும் சாக்கடல் நீரில் கலந்திருக்கின்றன. உப்பு மற்றும் மற்ற உப்புப் பொருட்களின் அதிகமான அடர்த்தியின் காரணத்தால் மீன்களோ மற்ற சாதாரண  நீர் வாழ்  உயிரினங்களோ இங்கே வாழ முடியாது.
இந்தக் காரணத்தால்தான் இதை சாக்கடல் என்று அழைக்கிறார்கள். ஆயினும் இங்கும் இந்தப் பெயர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.
ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,        ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன.
சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் ஆகியவை பெரிய அளவில் அடங்கியிருக்கின்றன.
நிறைய ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்
சாலைகள்      இவற்றைப்பயன்படுத்திவருகின்றன. சாக்கடலில் தண்ணீர் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதில் மனிதர்கள் மூழ்குவது சிரமம். மனிதர்கள் அதில் மிதக்கலாம். சாக்கடலில் படுத்தபடி பத்திரிகை படிக்கின்ற வெளிநாட்டுப் பயணிகளின் படங்கள் பிரபலமானவை.

Thanks: dinamani

No comments:

Post a Comment