Friday, April 26, 2013



அப்துல் கலாம் தரும் தன்னம்பிக்கை வரிகள்



 முடியாது என்ற நோய்

“கரிகாலன் முடியாது என்று நினை  த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக் ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற் கைக்கோளை இந்தியா ஏவியிருக் க முடியாது.
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டஇளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியைகா ண வேண்டும். நதிகளை இணை க்க வேண்டும் என்றால் என்ன வே ண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “