Sunday, September 30, 2012

கேரட்டை சாப்பிடும் முறை



கேரட்டை சாப்பிடும் முறை...

கேரட்டை சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வார்கள். சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகும். அதனால் சமைக்கால் சாப்பிட வேண்டும் என்பது அவர்கள் வாதம். சமைக்கால் அப்படியே சாப்பிடுவதும் நல்லதுதான் என்றும் சிலர் சொல்வது உண்டு. பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டும் நமது உடல் வைட்டமின் ஏ வாக மாற்
றும். ஆனால், சமைத்து சாப்பிடும் போது இது 50 சதவீதமாக அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்காக அதிக நேரம் அடுப்பில் வைத்திக்க வேண்டாம்.

எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலைச் சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிட வேண்டும். இந்த பகுதிகளில் தான் கேரட் செடி நன்றாக வளர வேண்டும் என்று தெளிக்கப்படுகிற பூச்சி மருந்து, உரம் அதிகமாக தேங்கி நிற்குமாம். கேரட்டை பச்சையாக சாப்பிடாமல், கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் வைத்து பின்னர் சாப்பிடலாம். இதனால், மண்ணில் இருந்து எடுக்கும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படும்.

No comments:

Post a Comment