Tuesday, June 28, 2016

புளியோதரை எப்படிச் செய்வது?

Image result for புளியோதரை

சாதம் - 2 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
புளிக்காய்ச்சல் தயாரிக்க:
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
கடுகு, உளுந்து, மஞ்சள் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டிஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - அரை கப்
புளிக்காய்ச்சல் பொடி தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - 3
தனியா, கருப்பு எள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்தால் எண்ணெய் பிரிந்து மேலே வந்து நிற்கும். அதுதான் பதம். அப்போது தேவையான அளவு உப்பைப் போட்டுக் கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் உலர்வான பாட்டிலில் எடுத்து வையுங்கள்.
புளிக்காய்ச்சல் பொடி தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றில் காய்ந்த மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்தெடுங்கள். தனியா, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். எள்ளைத் தண்ணீர் விட்டுக் களைந்து, வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.
வடித்த சாதத்தை அகலமான தாம்பாளத்தில் போட்டு அதன் மேல் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றுங்கள். அதன் மீது கறிவேப்பிலை, புளிக்காய்ச்சல், புளியோதரைப் பொடி சேர்த்துக் கலந்துவிடுங்கள். முந்திரிப் பருப்பு, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்துச் சேருங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் மணமும் சுவையும் நிறைந்த புளியோதரை தயார்.

No comments:

Post a Comment