Thursday, February 21, 2013

பிரதோஷ விரதம்




சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரிய அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலம் பிரதோஷ காலம்.
மூன்றே முக்கால் நாழிகை = ஒன் அரை மணி நேரம் (90 நிமிடம்)
சூரிய அஸ்தமனத்துக்கு முன் பின் 3 மணிநேரம்

பகலிலே சாப்பிடாமல், சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு சாப்பிட வேண்டும்.

பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது.

பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், அகாலமரணம், மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்.

அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம்.

No comments:

Post a Comment