Wednesday, January 2, 2013

ஆற்றல் மிகு மனிதவுடல்



ஆற்றல் மிகு மனிதவுடல்: பெறுதற்கரிய பிறவி..!

இன்று நாம் கண்ணால் காணும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் ஆல்பெர்ட் ஐன்ச்டின் போன்ற விஞ்ஞானிகள். இன்று வரை தன் மூளையை அதிகபட்சம்(~10%) பயன்படுத்தியவர்கள் இவர்களே. அதுவே 100% பயன்படுத்த முடிந்தால் எவ்வாறு இருக்கும் என்று யோசியுங்கள். 

அவ்வாறு செய்தவர்கள் தான் சித்தர்கள். அவ்வாறு மனித மூளையை 100% வேலைசெய்ய வைக்க அவர்கள் கண்டுபிடித்த வழிகள் தான் சரியை, கிரியை, யோகம், ஞானம்.

சித்தர்களின் முக்கிய தத்துவம்
“அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”.

பிண்டம் என்றால் நமது உடல். அண்டம் என்றால் பிரபஞ்சம். இந்த மானிடப் பிறப்பே உயர்ந்ததும், அரிதானதுமாகும். அதாவது பிரபஞ்சத்திலுள்ள சகல ஆற்றலும் மனித உடலுக்குள் உண்டு. அதைச் சரியான குரு துணையோடு தட்டி எழுப்புபவன் இறைநிலை அடைகிறான். அவ்வாறு உயர்நிலை அடைந்து மரணமிலாப் பெருவாழ்வு/ பேரானந்தம்/ மெஞ்ஞான நிலை/ சகாக்கலை/ பேரறிவு/ இறைநிலை அடைந்தவர்களே சித்தர்கள்.

கீரியை பாம்பு கடித்தால் உடனே அது ஒரு பச்சிலையை தின்கின்றது. ஆனால், நம்மை கடித்தால் நமக்கு ஏன் தெரியவில்லை..?! மருந்து என்னவென்று நம் மூளையிலிருந்தும் அது அறிவுக்கு வருவதில்லை. அதை கொண்டுவருவதே குண்டலினி யோகம்.

மருந்து என்பது மிகசிறிய வேலை. குண்டலினி யோகம் முடியும் போது அட்டமாசித்திகள் நம் அறிவில் தோன்றும். அதாவது 100% நம் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும். அறிவு பலமடங்கு அதிகரித்திருக்கும். பசி, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் நம்மை விட்டு ஒடிப்போகும். இவ்வாறே சித்தர்கள் பல யுகங்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் சூட்சம உடலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யோகமும் தவமும் வேறு. யோக ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். தவம் போன்ற விடயங்கள் தவறானவர்களிடம் சேர்ந்து, அவர்களுக்கும் அட்டமாசித்து கைகூடினால் தவறான நெறிசென்று உலகையே வெல்லும் எண்ணமுண்டாகலாம். எனவே தான் இவை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

அட்டமாசித்திகள்
*************************

சித்தர் பாடல்:

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
....... அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
....... சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
....... பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
....... வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.


1) அணிமா
2) மகிமா
3) இலகிமா
4) கரிமா
5) பிராப்தி
6) பிராகாமியம்
7) ஈசத்துவம்
8) வசித்துவம்

1) அணிமா: பூதவுடலை அணுப்போன்று சிறியதாக்குதல்
2) மகிமா: மேருபோன்று பெரியதாக்குதல்
3) இலகிமா: காற்றுப்போல இலேசாக்குதல்
4) கரிமா: பளுவாக்குதல்
5) பிராப்தி: அனைத்தையும் ஆளுதல்
6) பிராகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல்
7) ஈசத்துவம் : விரும்பியதனை செய்து முடித்தல்
8) வசித்துவம்: எல்லோரையும் தன் வயப்படுத்துதல்

No comments:

Post a Comment