Saturday, March 14, 2015

நண்டு மிளகு ரசம் :



நண்டு மிளகு ரசம் :
பேச்சிலர் சமையல் :
தேவையான பொருள்கள்:
பெரிய நண்டு - 3
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
மிளகுத்தூள் - 3 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* தக்காளி, கொத்தமல்லி தழை, சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும்.
* இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* மிளகை இடித்து பொடி செய்து அதனுடன் சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* இஞ்சி விழுது, கலந்து வைத்த‌ மிளகு, சீரகத்தூள் அனைத்தையும் சுத்தம் செய்த நண்டு மீது தடவி தேவையான அளவு உப்பு
சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கி வைத்த தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
* பிறகு மசாலா தடவிய நண்டை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* கொதித்ததும் கொத்தமல்லி தழை, எலுமிச்சை பழச்சாறு கலந்து சூடாக பரிமாறவும்.
* சுவையான, ஆரோக்கியமான நண்டு மிளகு ரசம் தயார். இதை சூடாக பரிமாறினால் மிகவும் சுவையுட‌ன் இருக்கும். இதை ரசமாகவும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment