Friday, May 23, 2014

நம் உடலின் எடையை குறைக்க கம்பு இட்லி, தோசை




கம்பு இட்லி, தோசை
நம் உடலின் எடையை குறைக்க கம்பை சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் எனில் க்ளைசிமிக் இன்டெக்ஸ் விகிதப்படி கம்பில் லோ க்ளைசிமிக் அளவு உள்ளது எடை குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பு வரப்பிரசாதம்.
கம்பு இட்லி செய்முறை:
கம்பு - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கைப்பிடி
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை: உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.
நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.
இதே மாவைக் கொண்டு தோசையும் வார்க்கலாம். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய வைத்து முதல் நாள் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசையாக வார்க்கவும்.
இருபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கம்பு தோசை தயார்
நன்றி: arusuvai
சுத்தமான கம்பு விதை இயற்கை அங்காடியில் கிடைக்கும்.

No comments:

Post a Comment