Thursday, December 6, 2012

கோவைப்பழம்.





கோவைப்பழம்..

நகரங்களில் கிடைக்காத
கிராமத்து நினைவுகளில்
இதுவுமொன்று.
...

கோடைக்காலங்களில்
வேலிகளிலும்
நாட்டுக்கருவேலமரங்களிலும்
படர்ந்திருக்கும் கோவைக்கொடிகளில்
பழுத்துக்கிடக்கும் இவற்றை
பறித்துத்தின்னும் ஆவலுக்கு
அடிமையாகதவர் எவருமுண்டோ...!

குழந்தைகளுடன் போட்டிபோட்டு
இப்பழங்களை கொத்தித்தின்னும்
கிளிகளும், காகங்களும்,
நாரத்தம்பிள்ளைகளும்
இப்போது எதைத்தின்னுகின்றனவோ
தெரியவில்லை..!

கோவைக்கொடியிலுள்ள
முற்றிய இலைகளைப்பறித்து
'கல்லு சிலேட்டு'களில்
அழகாகத்தோய்த்து
பின்னர் அந்த சிலேட்டுகளில் எழுதியது
அந்த எழுத்துகளைப்போலவே
'பளிச்' என நிற்கிறது மனதில்..!

கோவைக்காயின் குறும்பிஞ்சுகள்
வெள்ளரிக்காயின் சுவையை ஒத்திருந்ததால்
அதை திகட்டிப்போகும்வரை
தின்று தீர்த்தோமே..!

முற்றிய கோவைக்காய்களை
தயிரில் ஊறவைத்து
வற்றல்களாக்கி வறுத்துத்தின்றோமே..!

எதையுமே மறக்கமுடியவில்லை..!

வேலிகளை பெயர்த்துவிட்டு
காலூன்றிக்கொண்ட
காம்ப்பௌண்டு சுவர்களுக்கு தெரியாது
கோவைக்(கொ)கெடிகளின் புலம்பல்..

நன்றி :
ஃபீனிக்ஸ் பாலா


No comments:

Post a Comment