Thursday, August 1, 2013

இஞ்சி,சுக்கு ,கடுக்காய்-சித்த மருத்துவம் ...!





நம் உடலில் சேரும் நஞ்சையும்,கழிவுகளையும் இது போன்ற எளிய வழிமுறைகள் நம் உடலில் இருந்து விரட்டி நமக்கு பெரும் துன்பங்கள் வராமல் பாதுகாத்திடும், கடைபிடிக்க முயல்வோமா?...............காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி நடப்பவர் கூட கோலை வீசி விட்டு கம்பீரமாக நடப்பார்கள் என சித்த மருத்துவம் சிறப்பித்துக் கூறுகிறது.

இஞ்சி : தோல் நச்சுத்தன்மை உடையது என்பதால் தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து தெளிந்தவுடன் காலையில் அருந்தலாம், அல்லது தேனில் ஊறவைத்து விற்கப்படும் இஞ்சித்துண்டுகளையும் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்.பசியை தூண்டும்,குமட்டல்,வாந்தியைநீக்கும்,வயிற்றுவலி,ஜீரணக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது.

சுக்கு : சுண்ணாம்பு சத்து மிகுந்தது, இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் வலு கொடுக்கக்கூடியது.வயிற்றுப்புண்களை தடுக்கும்,ஏற்கனவே இருந்தாலும் குணமாக்கிவிடும் ஆற்றல் உண்டு.வயிற்றில் எஞ்சி இருக்கும் பித்த நீரை சமன் செய்யும் ஆற்றல் உண்டு.இதை நண்பகல் வெந்நீருடன் சாப்பிடலாம்.

கடுக்காய் : கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் எனக்கூறுவார்கள்.

இரத்தத்தை சுத்தம் செய்யும்,கழிவுகளை நீக்கும்,செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அரு மருந்து. கண் நோய்களுக்கு விடை கொடுக்கும். தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.

கடுக்காயை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் வயோதிகத்திலும் வாலிபர்களாக காட்சி அளிப்பார்கள், நரை அவர்களை அண்டாது.சுருக்கமாக சொன்னால் உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது.

பழங்காலத்தில் கடுக்காய் நீர் கொண்டு கட்டிய கட்டிடங்கள்,கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்து நிற்பதை காணலாம்.

இவ்வளவு அருமையான குணங்கள் கொண்ட ஒரு உடல் பாதுகாப்பு வழிமுறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்,இதை கடைபிடிக்க ஒரு மாதத்துக்கு மிஞ்சி போனால் நூறு ரூபாய் பிடிக்குமா?

கேஎஃப்சி சிக்கன்,மெக்டொனால்ட்ஸ் பர்கர் இன்னும் பிற துரித உணவுகளால் நம் உடலில் சேரும் நஞ்சையும்,கழிவுகளையும் இது போன்ற எளிய வழிமுறைகள் நம் உடலில் இருந்து விரட்டி நமக்கு பெரும் துன்பங்கள் வராமல் பாதுகாத்திடும், கடைபிடிக்க முயல்வோமா?

No comments:

Post a Comment