67வது சுதந்திர தின வாழ்த்து
சுதந்திர தின வாழ்த்து
சுதந்திர தினம் -
இன்று ஓர் நாள் விடுமுறை
மறுபடி கோஷம் !
கொஞ்சம் மிட்டாய்
விரியும் தேசிய கொடியில்-
உதிரும் பூக்கள் !
இனி இல்லை உறக்கம் !
நீ படுத்திருந்தால் -
சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும் ...!
நீ எழுந்து நின்றால்
நீ எழுந்து நின்றால் -
நீயும் எரிமலை ஆகலாம்! ..
வெல்க நாடு! வீர வாழ்த்துகள்!
இந்திய திருநாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற 67வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம் . இந்நன்நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் விடுதலை திருநாள் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன் . விடுதலை என்ற விருட்சகத்திற்கு நம் முன்னோர்களின் வீர, தீர தியாகங்கள் தான் விதையாக இருந்தது. விடுதலையின் நிழலில் இருக்கும் நாம், அந்த தியாகங்களின் நினைவுகளை போற்ற வேண்டும். அவர்களின் நோக்கம் சிதையாமல் பாதுகாக்க வேண்டும். .அடிமை இருளை விரட்டுவதற்க்காவும், தேச விடுதலைக்காவும், தீரர்கள் ஏற்றிய தியாக சுடரில் சாதி மத பேதங்கள் சாம்பலாகி இருக்க வேண்டும்.
மாறாக, அடிமை இருளை விரட்டிய நாம் ,இன்னும் அறியாமை இருளை விரட்டவில்லை. அறியாமை என்ற அபாய நோயினால் மக்கள் மனங்களில் மதவெறி, ஜாதி வெறி போன்ற மனித விரோத குணங்கள் குடி கொள்ள தொடங்குகின்றன. மதியை புதைக்கும் மதுவால் மனிதன் போதையின் அடிமையாகி புழுதியில் புரழ்கிறான், லஞ்சமும் ஊழலும் நம் நெஞ்சை பதற வைக்கின்றன.
மனித உரிமைகளின் சமாதி பூமியாக காஷ்மீர், பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்படும் உள்நாட்டு தொழில்கள், இவை எல்லாம் பெற்ற விடுதலையை நாம் போற்றி பேணாததன் விளைவுகள் ஆகும்.
அரிய தியாகங்களின் பயனாய் கிடைத்த விடுதலையின் 67 வது ஆண்டில் நாம் ஏற்க வேண்டிய சூளுரையாவன:- பெற்ற விடுதலையை முறையாக பேணிக் காப்போம். ஊழலை பொது வாழ்விலிருந்து நீக்குவோம். மது மற்றும் மதவெறியினை மாய்த்திடுவோம். வெல்க நாடு! வீர வாழ்த்துகள்!
No comments:
Post a Comment