Tuesday, February 12, 2013

இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம்





இந்திய குடியரசு தலைவர்களில் மிகவும் வித்தியசமானவர் அப்துல்கலாம். ஜனாதிபதியக பதவியேற்ற பின்னர் குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளையே மாற்றி அமைத்து விட்டார். இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளின் கையிலும், மாணவ-மாண்விகள் கையிலும் தான் இருக்கிறது என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக இவர் பள்ளிக் குழந்தைகளை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

எந்த ஒரு செயலுக்கும் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகவும் இருந்து வருகிறார். ஜனாதிபதி பதவிக்கு உரிய பகட்டுகள் எதையும் அவர் விரும்பியதில்லை. தனது பணிகலை எப்போதும் போல செய்து வருவதுடன் ஆடம்பரத்தையும் அவர் தவிர்த்து வந்தவர்.

பொதுவாக ஜனாதிபதியாக இருப்பவர்கள் உடை, காலணி அணியும் போது அவர்களுக்கு உதவி செய்ய பணியாளர் ஒருவர் இருப்பார். ஜனாதிபதியாக இருப்பவர் குனிந்து தனது shoe-க்களை அணிந்து கொள்ள சிரமப்படக்கூடாது என்பதற்காக உதவியாளர் ஒருவர் shoe-க்களை அணிந்து விடுவார், ஆனால் நமது இந்திய ஜனாதிபதி கலாம் அவர்கள் இந்த பதிவிக்காக ஒரு உதவியாளர் தேவை இல்லை என்று கூறிவிட்டார். மேலும் எனது வேலையை நானே செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்து விட்டார். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடு சென்றாலும் கலாம் இந்த எளிமையை பின் பற்ற தவறுவதில்லை.

ஜனாதிபதியாக இருந்த போது அவர் மியான்மார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அங்கு யாங்கூன் நகரில் உள்ள முகலாய வம்சத்தின் கடைசி மன்னர் பகதூர் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது வாசலில் தனது காலணிகலை கழற்றி வைத்து விட்டுச்சென்றர். அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பியதும் சாதாரணமாக நாற்காலி ஒன்றில் அமர்ந்து தனது காலணிகளை மாட்டிக் கொண்டார். இந்த காட்சியை அந்த நாட்டு மக்கள் பார்த்து வியந்தனர்.மேலும் ராணுவ ஆட்சி நடைப்பெற்ற மியான்மருக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதி ஆவார்...!

No comments:

Post a Comment