அதிமதுரம். இது, பார்ப்பதற்கு மரதுண்டுபோல இருக்கும். குளிர்ச்சிதன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரும். இனிப்பாக இருக்கும். தொண்டை அடைப்பு இருப்பவர்கள், தொண்டை கரகர என்று இருப்பவர்கள், இந்த அதிமதுரத்தை சாப்பிட்டால் தொண்டை அடைப்பும், கரகரப்பும் நீங்கும்.
உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தந்திடும். தலைமுடி நன்றாக வளர உதவும். எலும்பை பலப்படுத்தும். உடலில் இருக்கும் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது.
அதிமதுரத்தை தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் முழுவதும் எந்த வியாதியும் ஏற்படாது. அதனால் இதை மருத்துவ மூலிகை என்று கூறுவார்கள்.
- ஜி. விஜயலஷ்மி
No comments:
Post a Comment