Thursday, February 28, 2013

உடல் இளைக்க பசும் தேநீர் (கிரீன் டீ)..!




உடல் இளைக்க பசும் தேநீர் (கிரீன் டீ)..!

1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின் பயன்கள் :

* கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
* சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
* இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
* ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
* எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
* முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
* சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
* குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
* சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
* எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
* சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

2 comments:

  1. கீரீன் டீ ஒரு பொழுதும் கொழுப்பை கரைக்காது.
    ஆண்டீ ஆக்சிடன்ஸ் தான் இருக்கே தவிர மற்றவர்கள் சொல்வது போல் இது கொழுப்பை கரைக்காது. இதற்கு எந்த டாக்டர்களும் சான்று உரைக்க வில்லை.

    ReplyDelete
  2. Arrow shankar sir sorry to interrupt
    நா ப்ஸ்டு 75kg இருந்தேன் பட் நௌ நா 69 இருக்கேன் reason கீரின் டீ

    ReplyDelete