Tuesday, February 21, 2017

பாவம், நோய் போக்கும் திருவண்ணாமலை தீர்த்தங்கள்...!


Image may contain: one or more people, mountain and outdoor


Image may contain: outdoor



பாவம், நோய் போக்கும் திருவண்ணாமலை தீர்த்தங்கள்
திருவண்ணாமலையில் தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும். இங்கு இந்திரலிங்கமும், இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன.
இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துத்தான் தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான். மேலும் இந்திர பதவியில் நீடிப்பதற்கும் உரிமை பெற்றான். இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.
அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடி, நினைப்பால் உண்டான பாவத்தை நீக்கிக்கொண்டான்.
பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும். மலையின் தெற்கு திசையில் ‘எமன் தீர்த்தம்’ அமைந்து உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடல் பொன் வடிவம் பெறும். உடலில் உள்ள அனைத்து நோய்களும் ஒழிந்து போகும்.
எமன் தீர்த்தத்திற்கு தெற்கு திசையில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட ‘அகத்திய தீர்த்தமும்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் புரட்டாசி மாதத்தில் நீராடி, தண்ணீரை உட்கொண்டால் நம் முகத்தை பார்ப்பவர்களும் தமிழ் கவி அரசர்கள் ஆவார்கள். திருமகளும், கலைமகளும் அவரிடத்தில் வந்து தங்கி இருப்பார்கள்.
இந்த தீர்த்தம், நிருதி மூலையில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு ஏற்பட்ட அரிய பகைகள் எல்லாம் நீங்கும்.
மேற்கு திசையில் ‘வருண தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் 9 கிரகங்களும் நன்மையை கொடுக்கும். இந்த தீர்த்தத்திற்கு வாயு திசையில் ‘வாயு தீர்த்தம்’ உள்ளது. அதில் நீராடினால், எல்லா துன்பங்களும் தீரும். வடக்கு திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், வறுமை எல்லாம் நீங்கி, சிவபெருமான் திருவடியை அடையலாம்.
ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ‘ஈசான்ய தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி, ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள். அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ‘சிவகங்கை தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் ‘சக்கர தீர்த்தம்’ அமைந்துள்ளது. திருமால் ‘வராக’ அவதாரம் எடுத்த போது, இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் நீராடியவர்களும், இந்த தீர்த்தத்தை உட்கொண்டவர்களும் துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் இடமாகப் பெறுவார்கள்.
மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் நீராடி, ஓர் அணு அளவு தங்கத்தை தானம் செய்கிறவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.
ராஜகோபுரத்திற்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது, சிவாஞ்சி தீர்த்தம் (சிவன் அணைந்த தீர்த்தம்). இந்த தீர்த்தத்தில் குளித்தாலும், அல்லது தண்ணீரை எடுத்து தன் தலையில் தெளித்துக்கொண்டாலும், நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். சிவன் நல்ல வழி காட்டுவார். இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் உள்ளது என வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment