கசப்பும் கல்கண்டாகும் வெந்தயக் கீரையால் விளையும் நன்மைகள்:
Fenugreek எனும் ஆங்கிலத்திலும் மேதி என்று இந்தியிலும் அறியப்படுகின்ற மஞ்சள் நிறமும் இனிய மணமும் கொண்ட வெந்தயம் உடல் நலம் காப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. சமையலில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற மசாலாப் பொருள்களில் ஒன்று வெந்தயம். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்திருந்து காலையில் எழுந்ததும் அதைச் சாப்பிடுவது என்பது வட இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகின்ற ஒன்றாகும்.
அடிப்படையில் வெந்தயத்தை விட அதிகம் உடல் நலத்துக்கு உதவுவது வெந்தயக்கீரையே. இது இயற்கையான முறையில் உணவில் நார்ச்சத்து இருக்குமாறு செய்கிறது. சாப்பிடுகின்ற உணவில் நார்ச்சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவு கூடாமல் இருப்பதற்கும், நல்ல இதயப் பாதுகாப்பிற்கும் நார்ச்சத்து உதவுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் LDL என்னும் தீய கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து HDL என்றும் நன்மை தரும் கொலஸ்ட்ராலைச் சரியான அளவில் வைக்கும் பணியை நார்ச்சத்து செய்கிறது.
நீண்ட நாட்களாகத் தொல்லை தரும் வயிற்றுப் பொருமலைத் தவிர்க்கிறது. தேவைக்கு அதிகமாக உண்ணுவதையும், அதிகப் பசியையும் இது சீராக்குகிறது. அன்றியும் வெந்தயக்கீரையில் காணப்படும் நார்ச்சத்து கரையக் கூடிய தன்மையுடையது. (Soluble fibre) இதனால் இரத்தச் சர்க்கரை அளவு நிலை நிறுத்தப்படுகிறது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் குறையச் செய்வதுடன் ஒரே நிலையில் கட்டுப்படுத்தவும் செய்கிறது.
இது தவிர வெந்தயக்கீரை ஆஸ்த்மா மற்றும் மூச்சுக்குழல் நோய்களுக்கும், எலும்பு, மூட்டுவலி போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாகும். இயல்பாகவே வெந்தயம், இரத்தச் சர்க்கரை அளவை நெறிப்படுத்துவதுடன், Antioxidants எனப்படும் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருளினால் தனிம அணுக்களில் இருந்து பாதுகாக்கிறது. வட இந்தியாவில் பெரிய அளவில் பயிரிடப்படுகின்ற வெந்தயம் இரத்த சோகையை நீக்குகிறது.
* வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.
* வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
* வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.
* வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
* வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைய வாய்ப்பு இருக்கிறது.
* வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.
நன்றி: unavunalam
No comments:
Post a Comment