Thursday, May 9, 2013

"இரணியூர்-நகரத்தார் கோவில்...!"







ஆன்மீக அன்பர்களே உயிரினும் மேலான சிவனடியார்களே ...!

நகரத்தார் என்று அன்புடன் அழைக்கப்படும் நாட்டு கோட்டைச் செட்டியார்களின் 9 குலக்கோவில்களில் ஒன்று நகரத்தார்கள் நமது சனாதன தர்மத்திற்கு அளித்த மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றே இந்த சிவாலயம் பாண்டிய பேரரசர் சுந்தர பாண்டியன் வழிபட்ட மிகவும் புராதன,சுவாமி சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் சிவாலயம் சில நூறு வருடங்களுக்கு முன் நகரத்தர்களால் மறு ஊருவாக்கம் செய்யப்பட்ட அற்புத சிவாலயம் .

பல பிரமாண்டமான தூண்களையும்,தூண்களில் பல இறைமூர்த்திகளின் அற்புத வடிவத்தையும் கொண்ட ஒரு கலை பொக்கிஷமே இந்த சிவாலயம்.


புதுக்கோட்டை -திருப்பத்தூர் -மதுரை மார்க்கத்தில் கீழசீவல்பட்டியில் இருந்து
சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவாலயம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மி மற்றும் பிள்ளையார் பட்டியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த உன்னதமான சிவாலயம் .

திருகயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001-வது குரு மஹா சந்நிதானம்
சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை சத்குரு ஸ்ரீ-ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களால்
பைரவர் பூமி என்று போற்றப்பட்ட கால பைரவர் எழுந்தருளி உள்ள
அஷ்ட பைரவ தலங்களில் ஒன்றான மாபெரும் சிவாலயம்.

இரணியனை சம்காரம் செய்ததால் திருமாலுக்கு உண்டான தோஷம் நீங்க இறைவன் திருமாலுக்கு அருளிய இடம் என்பதால் "இரணியூர்" என்ற பெயரைப்பெற்ற அற்புத சிவாலயம் .

நரசிம்மருக்கு விமோசனம் தந்தால் நரசிம்மேஸ்வரர் என்றும் அழைக்கப்படும்
உங்கள் அனைவரின் உள்ளங்களை நிச்சயம் கொள்ளைகொள்ளும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் சிவனடியார்கள் தங்கள் குடும்பத்துடன்

அடிக்கடி தரிசிக்க வேண்டிய சிவாலயமே "இரணியூர்" என்னும் அழகிய கிராமத்தில் அமைந்த சிவாலயம் நம் அனைவரையும் ஆட்கொள்வதற்காக இறைவன் காத்துக்கொண்டிருக்கும் உன்னதமான சிவாலயமே அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி நம் அன்னை ஸ்ரீ சிவபுரம்தேவி சமேத ஆட்கொண்ட நாதர் சிவாலயம் .


மேலும் திருக்கோவிலின் அற்புதங்களுக்கு பார்க்கவும்
http://anaathee.blogspot.in/2013/04/blog-post_9730.html


நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
 Thanks :— withShanmugam ChettiarTamil Nadu Nattukottai Chettiar,Nattukottai Chettiar and 45 others.

No comments:

Post a Comment