வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர்
இந்த நந்தியை "தம்பி நந்தி' என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் நந்தி மிகப்பெரிய அளவில் அமர்ந்து பக்தர்களை எப்படி கவர்ந்தாரோ, அதே போல வேந்தன்பட்டி நந்தியும் ஒரு அற்புதம் செய்து பக்தர்களை ஈர்த்துள்ளார்.
இவ்வூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். அதை, புனிதம் கருதி இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமான சிவனை மானசீகமாக வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தனக்கு வயிற்று வலி உண்டானதாக உணர்ந்த பக்தர், தனக்கு நோய் குணமானால், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். நந்திக்கும் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அதிசய நெய்: இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் நந்தீஸ்வரருக்கு, நெய்யபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சமயம் அபிஷேக நெய்யில், கோயிலுக்கு தீபம் ஏற்றினர். அப்போது, நெய் ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மாறியதாம். எனவே, அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோயிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோயில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வராதது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்
No comments:
Post a Comment