வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் சூப்பர் ஜூபிடர்.
நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே, ஒரு மிகப் பெரிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கப்பா ஆன்ட்ரமீடா பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெளிக் கிரகத்தின் அளவு, சூரிய குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கிரகமான வியாழனை (Jupiter) விட 13 மடங்கு அதிகம். எனவே இதற்கு சூப்பர் வியாழன் என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஹவாயில் உள்ள சுபாரு டெலஸ்கோப் உதவியுடன் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது.
சூப்பர் வியாழன் கிரகம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த கிரகத்துக்கும் அதன் சூரியனுக்கும் உள்ள தூரம், நமது சூரிய குடும்பத்தில் நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைப் போல இரண்டரை மடங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது இந்த சூப்பர் வியாழனை உள்ளடக்கிய கப்பா ஆன்ட்ரமீடா பி
No comments:
Post a Comment