எச்சரிக்கை !!!
சமூக வலைத்தள யூசர் பெயர், பாஸ்வேர்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் வேண்டாம்!!!
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் பிரபலமான செமாண்டெக் நிறுவனம், ஆன்லைன் வர்த்தக செயல்முறைகளில், சமூக வலைத்தளங்களில் நாம் பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்களைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடும் முயற்சியில் பல மால்வேர் புரோகிராம்கள் இலக்கு வைப்பதால், இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த எனத் தனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை அமைத்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆன்லைன் வங்கிக் கணக்குகளைக் கையாள எனத் தனியே பெயர்களையும், பாஸ்வேர்ட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சமூக வலைத் தளங்களில், தங்கள் நிதி ஆதாரம் குறித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தவறு. அதே போல, உறுதி செய்யப்படாத லிங்க்களில் கிளிக் செய்வதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். அண்மையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் குறித்து ஒரு லிங்க் சமூக வலைத் தளங்களில் தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்தவர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில், இணையப் பயன்பாட்டில், பல லட்சக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. எனவே பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைத்து செயல்படுவதே சிறந்தது. இந்த தகவல்களை செமாண்டெக் நிறுவன நிர்வாக இயக்குநர் ஷந்தனு கோஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment