Tuesday, May 9, 2017

வன்னி மரம்...!


Image may contain: plant, outdoor and nature

வன்னி மரம் ...! மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னிமரம் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்ட மரமாகும். இந்த மரம் சனி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை சுவாசித்து தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதுதான் மருத்துவ குணங்களாக மாறுகின்றன. இந்த மரம் சனிகிரகத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள். எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும். வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.
தேவி சிவன் கண நாதன் ஆகியோருக்கு மிகவும் விருப்பமானது வன்னி இலை. வேத காலத்தில் யாக குண்டத்தில் அக்னியை வரவழைக்க இரு வன்னி மரக்கட்டைகளைக் கடையும்போது எழும் நெருப்புப் பொறி பயன்பட்டது
இம்மரத்தின் உடலில் எப்போதும் அனல் கனன்று கொண்டிருக்கும்.என்பது இதிலிருந்து புலனாகிறது. வறண்ட தரிசு நிலத்தில் செழித்து வளரும் வன்னி பாலை நிலத்து விலை மதிப்பில்லாத மரம் எனப் புகழப்படுகிறது. தனக்கு வேண்டிய ஈரப்பசையை மற்ற தாவரங்களிடமிருந்து உறிஞ்சாமல் வேர்களை 30 மீட்டர் ஆழம் வரை பூமிக்குள் ஊடுருவச் செய்து நீரை உறிஞ்ச வல்லது. மணல் மேடுகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. உயர்வகை மரக்கரியை அளிக்கிறது. நிலத்தை வளப்படுத்த நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து நைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து அதை மண்ணில் கலக்க உறுதுணையாக இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கலப்பை ஏர் ஆகியவற்றைத் தயாரிக்க இதன் மரக்கட்டை பயனாகிறது. இதன் மரப்பட்டை பலவித மருத்துவ குணங்கள் கொண்டது.
ராஜஸ்தானின் மானில மரமாகவும் ஜக்கிய அரபுக் குடியரசின் தேசிய மரமாகவும் வன்னி அங்கீகரிக்கப்பட்டுள்ளது பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாகும். வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. அதனால் தான் விஜயதசமியன்று ஆந்திராவில் இதன் இலையை “பங்காரம்” என்று சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக்கொண்டு தசமியைக் கொண்டாடுவர்
மருத்துவக் குணங்கள் :
காய்: வன்னிக் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும். இதனைப் பவுடராக்கி 5 கிராம் முதல் 7 கிராம் வரை மருந்தாகத் தரலாம்.
இந்தப் பவுடரைத் தேவைப்படும்போது சாப்பிட்டால் சீதபேதி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், இரத்த வாந்தி, சளியில் ரத்தம் கலந்து வரும் நோய்கள் கட்டுப்படும்.
வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும்.
மரப்பட்டை: விஷக்கடியை முறிக்கும் தசைப்பிடிப்பு மூல வியாதியைப் போக்கும்.
இலை:வன்னி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.
இலையும் பழங்களும் நரம்புத்தளர்ச்சியை நீக்கும்.
மரம்: இதன் மரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும்.
வன்னிமரத்தின் சிறப்பு
****************************
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.
✰ வன்னிமரம் பூக்காது. இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.
✰ வன்னி மரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும். வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.
✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.
✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.

No comments:

Post a Comment