கல்வியில் வெற்றிபெற:
புதன்கிழமைகளில், புதன் ஹோரையில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசி பருப்பு பொடி கலந்த அன்னத்துடன் பருப்பு பாயசம் நிவேதனம் செய்து, பைரவரை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
வியாபார வெற்றிக்கு:
புதன்கிழமைகளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசிப் பயறு சுண்டல், பாசிப் பயறு பாயாசம், பாசிப்பயறு பொடி கலந்த அன்னம், கொய்யாப் பழம் இவைகளை நிவேதனமாக வைத்து, அர்ச்சித்து பைரவரை வழிபட வேண்டும்.
பணக் கஷ்டம் நீங்கிட:
மண் அகலில் தாமரைத் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லது பவுர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ பூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீங்க:
தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சல் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு (தாலிக் கயிறு) சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சக சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம், ஜாக்கெட் துணியுடன் வசதி இருந்தால் புடவையும் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.
இழந்த பொருள் கிடைக்க:
மானம், மரியாதை, கவுரவம், இடம், சொத்து போன்ற நீங்கள் இழந்த பொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட, பைரவர் முன் 27 மிளகை மூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு, வராகிக்கு முன் சிறிது வெண் கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும்.
அஷ்டமிநாளில் வழிபட்டு மேன்மை அடையுங்கள்
No comments:
Post a Comment