Monday, October 7, 2013

முருங்கைகீரை







கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சித் தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம்.

சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

No comments:

Post a Comment