Wednesday, June 5, 2013

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?


ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

சென்னை: ஆன்லைன் மூலம் வருமான வரியை செலுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். உங்களுடயை வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன. நீங்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க தேவையில்லை, அல்லது செக்கை நிரப்பத் தேவையில்லை அல்லது 4 சலான்களை நிரப்ப தேவையில்லை. இவற்றிலிருந்து தப்பிக்க எவ்வாறு ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தலாம் என்று பார்ப்போம்.
வரி செலுத்துவதற்கு முன் தேவையான வசதிகள்
1. இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்யூட்டர்
2. நெட் பேங்கிங் வசதியுடன் கூடிய வங்கி கணக்கு
3. வங்கி வழங்கி இருக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்
வரி செலுத்த வேண்டிய முறைகள்
1. வங்கியின் நெட் பேங்கிங் கணக்கிற்கு செல்ல வேண்டும்.
2. www.incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பே டாக்சஸ் ஆன்லைன் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில் வரும் சலானை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதற்கான உதவிகளும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. பின் வருமான வரியை செலுத்த வேண்டும்.
5. வருமான வரியை செலுத்தியவுடன் உடனடியாக அதற்கான ரசீது அதாவது கவுன்டர்ஃபாயில், சிஐஎன்-னோடு (சலான் ஐடன்டிபிகேஷன் நம்பர்) திரையில் வரும்.
6. சிஐஎன்- எண்ணை வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும்.
6. கவுன்டர்ஃபாயிலை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் மேலும் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
7. நாம் செலுத்திய தொகை டாக்ஸ் இன்பர்மேசன் நெட்வொர்க்கை சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment