Friday, September 23, 2016

63 நாயன்மார் வரலாற்று சுருக்கம்




1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar(கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை பெற்றார்.)
2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanarசிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanarநடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanarதன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்5.விறல்மிண்டர்/Viralminda Nayanarசிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.6.அமர்நீதியார்/Amaraneedi Nayanarசிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்7.எறிபத்தர்/Eripatha Nayanarசிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanarகொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.9.கண்ணப்பர்/Kannappa Nayanarபக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanarசாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanarமறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanarசிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.13.ஆனாயர்/Anaya Nayanarபுல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.14.மூர்த்தி/Murthi Nayanarசந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்15.முருகர்/Muruga Nayanarவழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanarகழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanarதாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanarசிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanarதேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.21.குலச்சிறையார்/Kulacchirai Nayanarபாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanarசுந்தரருடன் கயிலை சென்றவர்.23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyarஇறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanarதிருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanarதிருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigalதண்ணீரால் விளக்கு ஏற்றியவர்27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandarஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanarஇறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.29.திருமூலர்/Tiru Mula Nayanarதிருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanarகண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.31.மூர்க்கர்/Murkha Nayanarசூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்32.சோமாசிமாறர்/Somasira Nayanarநிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.33.சாக்கியர்/Sakkiya Nayanarஅன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.34.சிறப்புலி/Sirappuli Nayanarசிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanarபைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanarசுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.37.கணநாதர்/Gananatha Nayanarசிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.38.கூற்றுவர்/Kootruva Nayanarநாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanarஎறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyarசுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.41.அதிபத்தர்/Adipattha Nayanarவலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.42.கலிக்கம்பர்/Kalikamba Nayanarமுன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.43.கலியர்/Kalia Nayanarவறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.44.சத்தி/Satti Nayanarசிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanarமன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.46.கணம்புல்லர்/Kanampulla Nayanarவிளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்47.காரி/Kari Nayanarகாரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanarதிருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.49.வாயிலார்/Vayilar Nayanarஇறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.50.முனையடுவார்/Munaiyaduvar Nayanarஅரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanarசிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.52.இடங்கழி/Idangazhi Nayanarஅரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.53.செருத்துணை/Seruthunai Nayanarசிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanarவறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.55.கோட்புலி/Kotpuli Nayanarசிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.56.பூசலார்/Pusalar Nayanarபொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyarசைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.58.நேசர்/Nesa Nayanarஎப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanarமுற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanarஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்61.சடையனார் நாயனார்/Sadaya Nayanarசுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.62.இசைஞானியார்/Isaijnaniyarசுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanarதேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர்.

Monday, September 5, 2016

பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்


Image result for பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்


1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்.
வியாபாரத்தை பெருக வைப்பார
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
15 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்..💐

சுக்கு மருத்துவக் குணங்கள்

Image result for சுக்கு
சுக்கு மருத்துவக் குணங்கள்:-
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

Tuesday, July 19, 2016

உங்களுக்கு தெரியுமா ........!



* மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
* 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
* நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
* மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
* நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
* ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
* வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
* மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
* கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
* ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
* பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
* நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
* ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
* ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
* புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
* சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
* நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
* ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
* ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
* வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
* எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
* "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.
* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.
* நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.
* குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.
* வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
* அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.

* செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.
* சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
* பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.
* தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.
* பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.
* திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
* கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
* மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
* பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
* ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
* பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
* தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை.


அப்பாடி மூச்சு முட்டுது நண்பரே .......!

பழ . சுப்ரமணியன் 

Monday, July 4, 2016

விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:



விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:
1. மச்ச அவதாரம்- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.
2. கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி. விலங்கு உயிரினம்.
4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
5. வாமண அவதாரம்- குள்ள மனிதன்...பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்...
6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
9. கிருஷ்ண அவதாரம்- சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்
இந்து மதம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளுடன் கலந்து உருவான ஒரு கலாச்சாரம் ...

Sunday, July 3, 2016

பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்






பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:
1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்...
8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்
10. மேனிபளபளப்பை பெறும்.
11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்
12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்
13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
17.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது
18.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.
19.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்
20.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.

Thanks: Mr. Kanagasabai Ramasamy

Wednesday, June 29, 2016

காய்கறி வடை எப்படிச் செய்வது?





என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 2
கேரட், கோஸ், சின்ன வெங்காயம் (நறுக்கியது) தலா 2 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
கடலைப் பருப்பு ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பை ஊறவையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட், கோஸ், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். ஆறியதும் அதனுடன் பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
பிசைந்த கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சிறு தீயில் வேகவைப்பது நல்லது. இதையே உருண்டையாகப் பிடித்து கடலை மாவில் நனைத்து போண்டாவாகவும் செய்யலாம்.

நன்றி : ராஜபுஷ்பா