
Wednesday, March 19, 2014
மாதுளம்பூ

மாதுளம்பூவின் பயன்கள்
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
Thursday, March 6, 2014
சதுரகிரி - மகாலிங்க மலை...!
சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை. இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். [theerththam.jpg] தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர். *சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. *ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். * பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. *இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். *மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. * சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். * ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. * சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர். இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம். அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள். திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131 மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும். சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது. பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது. பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. [p91a.jpg] தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம். பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்த
Tuesday, March 4, 2014
சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.
எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.
சோற்றுக் கற்றாழை

இளமையா இருக்க ஆசையா?
‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது
Monday, March 3, 2014
274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள்...!

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.
274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள்:.
எண் - கோயில் - இருப்பிடம் - போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்ப
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிரு
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோண
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவை
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்தில
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில்
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோ
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிர
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தி
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திர
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்ச
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி-
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலி
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூ
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்த
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திரு
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாட
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடு
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறை
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி
Subscribe to:
Posts (Atom)
