Saturday, January 26, 2013

தேனீக்கள் பற்றிய தகவல் !!!




தேனீக்கள் பற்றிய தகவல் !!!

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.


தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)



ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.


இராணித் தேனீ

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.

அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ஆண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன
இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.


தேனின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது

உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்

உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.

வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.

தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.
 

ஆலிவ் எண்ணெய்




ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!!

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

Wednesday, January 23, 2013

மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளைகளை பற்றிய தகவல்.




இன்று மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளைகளை பற்றிய தகவல்.
அன்றாட வாழ்வில்மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.
கண்களை காத்துக்கொள்ளுங்கள்:
மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில்சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.
சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:
கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.
தலைவலி:
கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்:
தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்க ளுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.
கிட்டப் பார்வை:
மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின் றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.
கண்களை காக்க...:
* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள ்
காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
தொடர்ந்து மொபைலில் பேசும்37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்துபேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம்வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.
காதிரைச்சலை தவிர்க்க...:
* அதிகப்படியான ஒலியைக் கேட்கக்கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வைதவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.
கவனமாக இருங்கள்:
* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும ் முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்'செய்யும் போது 91சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தைசாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால ், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்
தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:
* மொபைல் போனை உபயோகிப்போருக்க ு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்க ு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் , மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள் ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்குமுன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை"ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக்கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்'செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்க ு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்துஏற்படும்.
விபத்தை தவிர்க்க...:
* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டியகட்டாயத்தில்"ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை"வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முன்பு கவனிக்கவேண்டியவைகள்..!




வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முன்பு கவனிக்கவேண்டியவைகள்..

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்பு தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள்.

அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...!

Monday, January 21, 2013

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி ...!




முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! 

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?




உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!

வணக்கம் நண்பர்களே..! பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். 

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள்.
(win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக்
செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும்
டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும்
தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok
கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings
என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்

புளியாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:-





புளியாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:- 

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
3. புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
4. புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
5. புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும்.
6. புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதில் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.
7. புளியாரைக் கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
8. புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணம¡கும்.
9. புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.
10. புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?





இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம். அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது. மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

* அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

* இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

* நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

* இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்

. * இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனல் அவை இரவில் ஜீரணமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள.
 —

ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?




நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்..! 

மாதம்தோறும் மீட்டரில் கணக்குப் பார்த்து எழுதிவிட்டுப் போகும் மின்சாரத்துறை ஊழியர்களிடம் "இந்த மாதம் எத்தனை யூனிட் ஆகி இருக்கிறது?'' என்று கேட்பது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வழக்கமான கேள்வி. அதிலிருந்து மின்சார 'பில்' அந்த மாதம் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுவதற்காகத்தான் அந்தக் கேள்வி. ஆனால், ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து.....

2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம் பம்ப் செய்யலாம்.

40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.

60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.

நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.

ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.

ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.

ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.

ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.

தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.

180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.

2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.

இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.

நீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி?




நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். பாடங்களை உங்களால் வேகமாக படிக்க முடிந்தால், நேரத்தையும், ஆற்றலையும் அதிக அளவில் சேமிக்க முடியும். உங்களுடைய தற்போதைய படிக்கும் வேகத்தை முதலில் அறிந்துக் கொண்டபின்தான் அதை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

நீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி?

நிமிடத்திற்கு 250 முதல் 300 வார்த்தைகளை படிக்கும் திறமை நல்ல வேகம் எனலாம். ஆனால், அந்த வேகத்தைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்.

ஒரு புத்தகத்தில் உள்ள பக்கம் ஒன்றை எடுத்து அமைதியாகவும், வேகமாகவும் படிக்கவும். அதன் பொருளை புரிந்துகொள்ள அக்கறை காட்ட வேண்டாம். படிக்கத் தொடங்கும் முன் நேரத்தை குறித்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து நீங்கள் படித்திருக்கும் வார்த்தைகளை கூட்டிப் பார்க்கவும். அந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்தால் ஒரு நிமிடத்திற்கு நீங்கள் படிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை கிடைக்கும். அதுவே உங்கள் தற்போதைய வேகம். உதாரணமாக, நீங்கள் 5 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் படித்தீர்களானால் உங்களுடைய படிக்கும் வேகம் நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் ஆகும்.

கீழேகொடுக்கப்பட்டிருக்கும் முறைகளின் மூலம் இந்த படிக்கும் வேகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். இவை நல்ல பலன்களைத் தரும்.

* கண்ணாடி முறை (Mirror Technique)

* தலைகீழாகப் படிக்கும் முறை (Upside-down Technique)

* வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

1. கண்ணாடி முறை (Mirror Technique)

ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வேகமாகப் படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பிக்கவும். கண்ணாடியில் பிரதிபலிப்பதை படிக்கவும். அந்த பிரதிபலிக்கும் பக்கத்தை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் செய்யவும். ஐந்து முதல் ஆறே வாரங்களில் (கிட்டத்தட்ட 40 நாட்களில்) உங்கள் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

2. தலைகீழாகப் படிக்கும் முறை

வேகமாக ஒரு பக்கத்தை படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அந்த பக்கத்தைத் தலைகீழாக மாற்றி மீண்டும் அந்த வரிகளின் மேல் ஆள்காட்டி விரலை (Index finger) வைத்துப் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் குறைந்தது 40 நாட்கள் படிக்கவும்.

இந்த இரண்டு முறைகளால் நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

படிக்கும் வேகம் எப்படி அதிகரிக்கிறது?

கண்ணாடியில் பிரதிபலிக்கும் பக்கத்தை படிக்கும் போதும், தலைகீழாகப் படிக்கும் போதும், அது புது அனுபவம். மேலும், படிப்பதற்குக் கடினமாக இருப்பதால் அவற்றைப் படிக்கின்ற போது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

இப்படி 10 நிமிடங்கள் படித்த பின், அதிக கவனம் செலுத்தி படிக்க உங்கள் மனம் பழக்கமாகி விடும். அதன் மூலம் உங்களால் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.

பின்னர் அந்த பாடப்பகுதியை நீங்கள் நேராக படிக்கும் போது நன்றாகப் பழக்கப்பட்ட நிலையில் அமைந்திருப்பதால் படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம், உங்களால் அதிவேகமாகப் படிக்க முடியும்.

இம்முறைகளில் பயிற்சியெடுக்கும் போது, படிக்கும் வேகமே முக்கியம். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாடத்தைப் புரிந்துகொள்ளாமல், படிக்கும் வேகம் அதிகரிக்கும் போது, நீங்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் வேகமும் தானாகவே அதிகரிக்கும்.

3. வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

எளிமையான இப்பயிற்சியை சுலபமாக பின்பற்றலாம். இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பகுதியின் வார்த்தைகளை மட்டுமே வேகமாகப் படிக்க வேண்டுமெயொழிய அப்பகுதியின் அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதாவது, ஒவ்வொரு வார்த்தையை மட்டுமே பார்த்து அடையாளங்கண்டு பின் அடுத்த வார்த்தையைப் பார்க்க வேண்டும்.

இந்த பயிற்சி முறையில், நீங்கள் படிக்கும் பகுதியை சரியாகப் படிப்பதில்லை. ஆனால் உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள்.

இது எப்படி வேலை செய்கிறது!

நீங்கள் அடையாளம் காணும் வார்த்தைகள் உங்களுடைய மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது, அந்த பாடப்பகுதியை படங்களாக படித்திருக்கிறீர்கள். அப்படி முறையாகப் பயிற்சி செய்யும்போது, ஒரு நிலையில் 'நீடுவாழ்கநிறைமகிழ்வெய்துக' போன்ற மிகப்பெரிய வார்த்தையையும் உங்களால் உடனடியாக அடையாளம் காண முடியும். இந்த திறமை இயல்பாகவே உங்களுடைய படிக்கும் ஆற்றலை மிகவும் அதிகரிக்கும்.

இப்பயிற்சிகள் ஆதாரபூர்வமானதா?

முன்பு விளக்கப்பட்டது போல், முதலில், உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். பின்னர் கண்ணாடி முறை, தலைகீழாகப் படிக்கும் முறை, மற்றும் வார்த்தை ஓட்டமுறை ஆகிய பயிற்சி முறைகள் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவும். இப்போது மீண்டும் உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். உங்களால் நம்பமுடியாத அளவு படிக்கும் வேகம் அதிகரித்திருக்கும். இதுவே நீங்கள் பயன் அடைந்ததற்கான ஆதாரம். இந்த பயிற்சி முறைகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் பயிற்சி செய்யவும். அதனால், உங்களுடைய நேரமும், சக்தியும் பெருமளவு மிச்சமாகும். தேர்வு நேரத்தில் ஏற்படும் பரபரப்பும், மன அழுத்தமும் நிச்சயமாகக் குறையும். மேலும், இரவும் பகலும் புத்தகங்களோடு போராட வேண்டிய அவசியமும் இருக்காது.

வேகமாக எழுதும் முறை:

ஒரு மாணவர் அறிவு கூர்மையுடன், தேர்வுக்குத் தன்னை நன்றாகத் தயார்படுத்தி இருக்கலாம். தேர்வில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் நன்றாக தெரிந்தும் இருக்கலாம். ஆனாலும், வினாத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் 2-3 மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்கவில்லை என்றால், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, ஒரு மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக அவசியமாகிறது.

இந்த பயிற்சியின் விளைவு!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி முறை மிகவும் பயனளிப்பதாகும். தேர்வு நாட்களுக்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன் பயிற்சியை செய்யத் தொடங்கினால்கூட நல்ல பலன்களை காண முடியும். இருப்பினும், மிகச்சிறந்த பலன்களைப் பெற 40 நாட்கள் பயிற்சி செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

பயிற்சி முறை:

இப்பயிற்சிக்கு ஏதாவது ஒரு பகுதியை உங்களுடைய இயல்பான வேகத்தில் 5 நிமிட நேரம் எழுதவும். அதே பகுதியை 4 நிமிடங்களுக்குள்ளும், மீண்டும் 3 நிமிடங்களுக்குள்ளும் எழுதவும். மொத்தமாக 12 நிமிடங்கள் எழுதியிருக்கிறீர்கள். இப்படி தினமும் இருமுறை எழுதிப் பயிற்சி செய்யவும். இவ்விதம் தேர்வுக்கு 40 நாட்கள் முன்பே பயிற்சி செய்தால், உறுதியாக பெரும் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.

இது எப்படி செயல்படுகிறது!

5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 4 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது மிகவும் கடினமான ஒரு செயல் அல்ல. அதே பகுதியை 3 நிமிடத்திற்குள் முடிப்பது கொஞ்சம் சவாலானது. ஆனாலும், 3 நிமிடம் மட்டுமே என்பதால் உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.- (குழந்தை வளர்ப்பு:வேகமாகப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகள்!
பேராசிரியர் Dr. J.N. ரெட்டி)

மிளகு (Black pepper)




"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

Saturday, January 19, 2013

ஆரோக்கிய வாழ்வுக்கான எளிய வழிகள்




ஆரோக்கிய வாழ்வுக்கான எளிய வழிகள் 
தொப்பை தவிர்க்க டிப்ஸ்
Health Tips for the day - Flat tummy tips



1 சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்
Drink a glass of water before eating

2 உணவை சிறிய சிறிய அளவாகப் பிரித்து ஐந்து வேளை சாப்பிடுங்கள்
Eat five small meals a day

3 பொறுமையாகச் சாப்பிடுங்கள்
Eat Slowly

4 எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்
Never skip breakfast

5 இனிப்பை குறைத்துக்கொள்ளுங்கள்
Eat less sweets

6 இரவில் 7 முதல் 8 மணி நேரம் நன்கு தூங்குங்கள்
Get at least 7-8 hours of sleep every night

7 அதிகம் தண்ணீர் குடியுங்கள்
Drink lots of water

8 மது அருந்துவதைத் தவிர்த்துவிடுங்கள்
Cut down on alcohol

9 சோடா வகை குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள்
Cut out soda

10 துரித உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்
Cut out on fast food

11 பழங்களை சாப்பிடுங்கள்
Eat fruits

12 காய்கறிகளைச் சாப்பிடுங்கள்
Eat veggies

13 நார்ச்சத்து நிறைந்த உணவுவகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
Enrich your diet with fiber

14 உப்பு எடுத்துக்கொள்ளும் அளவைக் குறையுங்கள்
Cut down salt intake

15 நீச்சல் பயிற்சி செய்யுங்கள்
Swim

16 மன அழுத்தத்தைத் தவிர்த்துவிடுங்கள்
Avoid stress

17 தினமும் நடை மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்

Friday, January 18, 2013

நலம் கொடுக்கும் இலைகள். . .







வேப்பிலை. . .

குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை. . .

கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை. . .

அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை. . .

இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை. . .

தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை. . .

சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை. . .

தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

மா இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ விரைவில் ஆறும்.
மாந்தளிரை மென்று தின்று வர, பல் ஈறு உறுதிப்படும்.
மா இலையைத் தீயிலிட்டுப் புகையை சுவாசிக்கத் தொண்டை வலி மாறும்.

இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும்.
உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப் போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன, வயிற்றுவலி குணமாகும்.


பப்பாளி இலை. . .

பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை. . .

இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை. . .

சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை. . .

தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை. . .

முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை. . .

தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை. . .

எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது

 — Thanks Vlambaram NewspaperRaja MahendranRaja Mahendran and Gowri Dayalan.

சுண்டக்காயின் மருத்துவ குணம்..!





சுண்டக்காயின் மருத்துவ குணம்..!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்துஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?





உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Courtesy :விகடன்
 

Thursday, January 17, 2013

HOW TO READ BAR CODES...







HOW TO READ BAR CODES...



ALWAYS READ THE LABELS ON THE FOODS YOU BUY--NO MATTER WHAT THE FRONT OF THE BOX OR PACKAGE SAYS, TURN IT OVER AND READ THE BACK---CAREFULLY!


With all the food and pet products now coming from China, it is best to make sure you read label at the supermarket and especially when buying food products. Many products no longer show where they were made, only give where the distributor is located.

Can you differentiate which one is made in Taiwan or China ? The world is also concerned about GMO (Genetically Modified Organism) foods; steroid fed animals (ex: 45 days old broiler chicken).

It is important to read the bar code to track its origin. How to read Bar Codes....interesting !

If the first 3 digits of the bar code are 690, 691 or 692, the product is MADE IN CHINA.
471 is Made in Taiwan .
If the first 3 digits of the bar code are 00-09 then it's made or sourced in USA.

This is our right to know, the barcode

remember if the first 3 digits are:
890......MADE IN INDIA
690, 691, 692 ... then it is MADE IN CHINA
00 - 09 ... USA and CANADA
30 - 37 ... FRANCE
40 - 44 ... GERMANY
471 ........ Taiwan
49 .......... JAPAN
50 .......... UK Share it!

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?






ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? 

ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.

அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.


ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:

நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.
ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

Thanks : www.99likes.blogspot.com


பூவரசம் பூ



சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்..!

பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை. 

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.

உணவு உட்கொள்ளும் 12 வகைகள்




1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

Wednesday, January 16, 2013

வெந்தயக்கீரை!





இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

Friday, January 11, 2013

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்




நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.